Propellerads

About

Navigation
Recent News

திருநங்கைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளுக்கு இனி இடமில்லை என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டிரம்ப் பதிவியேற்ற நாள் முதல் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் நடைமுறையை முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கொண்டு வந்தார். 
இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். 

இந்நிலையில், தற்போது அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என டிரம்ப் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

என்னுடைய ஜெனரல்கள் மற்றும் இராணுவ நிபுணர்களுடன் சேர்ந்து ஆலோசித்த பிறகு அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் பணி புரிய அரசு அனுமதிக்காது எனபதை பரிந்துரைக்கிறேன். 

திருநங்கைகளால் இராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: