சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது மும்பையின் ஜனநெருக்கடியான இடத்தில் 'காலா' படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவுக்கு உடல்பரிசோதனை செய்ய தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் சென்றுள்ளார்.
அமெரிக்கா செல்லும்போதெல்லாம் அங்குள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்வதும் அங்குள்ளவர்களிடம் சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து அவர் ஆலோசனை செய்வது வழக்கம்.
அமெரிக்கா செல்லும்போதெல்லாம் அங்குள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்வதும் அங்குள்ளவர்களிடம் சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து அவர் ஆலோசனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது அவர் அரசியலில் இறங்குவது குறித்து ரஜினி அமெரிக்காவில் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினி, பின்னர் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது தனது அரசியல் முடிவை அவர் பகிரங்கமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
Post A Comment: