கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணை தாண்டி வருவாயோ' வெற்றி படம் இன்றளவும் காதலர்களின் மனம் கவர்ந்த படங்களின் பட்டியலில் உள்ளது.
குறிப்பாக இந்த படத்தில் ஜெஸ்ஸியாகவே த்ரிஷா வாழ்ந்தார் என்றும் கூறலாம். இந்த படம் வெளியான நேரத்தில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜெஸ்ஸி என்று பெயர் வைத்ததாக கூறப்பட்டது.
த்ரிஷாவின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத இந்த ஜெஸ்ஸி கேரக்டர் மீண்டும் அவரை தேடி வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆம், தற்போது த்ரிஷா நடித்து வரும் முதல் மலையாள திரைப்படமான 'ஹேய் ஜூட்' என்ற படத்தில் அவர் மலையாள கிறிஸ்துவ பெண் கேரக்டரில் நடித்து வருகிறார்.
முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமான இந்த படத்தில் கிட்டத்தட்ட விடிவி ஜெஸ்ஸி போலவே த்ரிஷாவின் கேரக்டர் அமைந்துள்ளதாகவும் எனவே த்ரிஷாவை மீண்டும் ஜெஸ்ஸி வடிவில் ரசிகர்கள் பார்க்க ஒரு சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
'நேரம்' நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்த வரும் த்ரிஷா ஏற்கனவே பேட்டி ஒன்றில் இந்த படத்தின் கதை மிகவும் வலுவானது என்றும், தனது முழு நடிப்புத்திறமையை வெளிப்படுத்த கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இந்த படத்தை தான் கருதுவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: