உலகப்புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர், முதன்முதலாக இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இந்தியா வந்துள்ளார். நேற்று மு.ன்தினம் இரவு, மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரபல நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் ’ஷெரா', ஜஸ்டினின் பாதுகாப்பு பணியை ஏற்றுள்ளார்.
மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களிலும் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post A Comment: