தனுஷ் “விஐபி 2” திரைப்படத்தின் திரையிடல் திகதி குறித்த ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவின்படி 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வெளியாகிறது.
ஜூலை 28 என்பது தனுஷின் பிறந்த நாள் என்பதால் அவரது பிறந்த நாள் விருந்தாக இந்தத் திரைப்படம் அதே திகதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் வெளிவந்த சில நிமிடங்களில் தனுஷ் இரசிகர்கள், டுவிட்டரில் #VIP2 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தமிழக அளவுக்கு டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்.
தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
Post A Comment: