Propellerads
Navigation

அஜித்துக்கு 'ஏகே', கருணாகரனுக்கு 'ஆப்ஸ்'


தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையில் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித், கருணாகரன் ஆகியோர்களின் கேரக்டர் பெயர் மற்றும் இருவருக்குமான காட்சிகள் குறித்து இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சர்வதேச இண்டலிஜெண்ட் ஏஜண்டாக நடித்து வரும் அஜித்தின் கேரக்டர் பெயர் 'ஏகே'. அஜித்குமார் என்பதின் சுருக்கமாக இருக்குமா? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்வோம். அதேபோல் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் கருணாகரனின் பெயர் ஆப்ஸ். கருணாகரன் இந்த படத்தில் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழர் கேரக்டரில் நடித்துள்ளார். இயல்பாகவே காமெடி சென்ஸ் உள்ள கருணாகரன், இந்த படத்தில் அஜித்துடன் கிட்டத்தட்ட படம் முழுவதும் தோன்றி காமெடியில் தூள் கிளப்பியிருக்கின்றாராம்.

இயக்குனர் சிவாவின் முந்தைய படங்களான சிறுத்தை, வீரம், வேதாளம் ஆகிய படங்களில் காமெடியும் ஒரு ஹைலைட்டாக இருந்தது போலவே இந்த அதிரடி ஆக்சன் படத்திலும் ஆங்கங்கே தனது காமெடி முத்திரையை பதித்துள்ளாராம். எனவே அனைத்து தரப்பினர்களும் விரும்பும் வகையில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் ஒரு படமாக 'விவேகம்' ஒரு மிகச்சிறந்த எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்று இயக்குனர் சிவா உறுதியளித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: