Propellerads

About

Navigation
Recent News

'காலா' பட செட்டில் திடீர் விபத்து! ஒருவர் பரிதாப பலி

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து பிற நடிகர்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகளில் ஒருவர் திடீரென எதிர்பாராத நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த எதிர்பாராத விபத்து படக்குழுவினர்களையும் செட் போடும் மற்ற தொழிலாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த காளி' படத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமான தீ விபத்து ஏற்பட்டு ஸ்டண்ட் நடிகர்களும் குதிரைகளும் பலியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: