ஜெய் மற்றும் அஞ்சலி காதல் முறிந்துவிட்ட நிலையில், அஞ்சலி அமெரிக்கா பறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தின் மூலம் ஜோடியாக நடித்தவர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி.
இத்திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாகப் பேசப்பட்டது. இதனை இருவருமே மறுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களில் சுற்றித்திரிவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக ஜெய் கூறுகையில், நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மை தான். எனக்கு அஞ்சலியை பிடிக்கும். அவருக்கு என்னைப் பிடிக்கும் என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மகளிர் மட்டும் திரைப்படத்துக்காக நடந்த தோசை சுடும்போட்டியில் இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் காதலை உறுதிப்படுத்திக் கொண்டார்.
அதன் பின்னர், அஞ்சலியின் பிறந்தநாளின் போது ஜெய் அனுப்பிய வாழ்த்து, டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பலூன் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நெருக்கம் அதிகமாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. இதையடுத்து, காதல் முறிவுக்குப் பிறகு அஞ்சலி அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
Post A Comment: