நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில், இன்று (29) காலை 9 மணியளவில், வீதியில் பயணித்த காரொன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், இதில் பயணித்த மூவரும் எந்தவொரு பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த கார், நுவரெலியாவிலிருந்து இரத்தினபுரிக்குச் செல்லும் வழியில், ஹட்டன்-பொகவந்தலாவை பிரதான வீதியில், நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே வந்த பாரவூர்தியொன்று இடமளிப்பதற்காக முற்பட்ட போதே, குறித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
#Norwood #Accident
Post A Comment: