Propellerads

About

Navigation
Recent News

சமத்தான நடிகைக்கு மீண்டும் சிக்கல்

சமத்தான நடிகை ரொம்ப நேரம் வெயிலிலோ, அதிக வெளிச்சம் கொண்ட விளக்கு முன்போ நின்றால் சருமப் பிரச்சினை ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார். இப்படி சருமப் பிரச்சினையால் முன்னணி இயக்குனர்களின் படங்களில்கூட இவரால் நடிக்க முடியாமல் போனது.

இப்போது முன்பு எப்போதும் உள்ளதைவிட கடுமையான வெயில் வாட்டி எடுப்பதால் அந்த நடிகைக்கு மீண்டும் சரும பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எப்போதும் பிறந்தநாளை வெளிப்படையாக கொண்டாடும் நடிகை, சமீபத்தில் அவருடைய பிறந்தநாளை ரொம்பவும் அடக்கியே வாசித்தாக சொல்லப்படுகிறது.

விரைவில் இவருக்கு கல்யாணம் வேறு ஆகப்போவதால் தான் கமிட்டான படங்களை இவர் முடித்துக் கொடுப்பாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும், சருமப்பிரச்சினையில் இருந்து மீண்டுவர நடிகை கடுமையாக போராடி வருகிறாராம். தன்னை நம்பி படங்களில் ஒப்பந்தம் செய்த இயக்குனர்களை ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.
Share
Banner

Post A Comment: