நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், பிரபல மலையாள நடிகர் திலீப்பும், அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனும் விரைவில் கைதுசெய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து இருவரும் தலைமறைவாகி இருக்கிறார்கள். கொச்சி ஆலுவா போலீஸ் கிளப்பில் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் கைது நடவடிக்கைகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி கடத்தப்பட்டு 2 மணிநேரம் காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப் மீது விழுந்த சந்தேகத்தின் நிழல் இன்னும் விலகவில்லை.
இதையடுத்து, நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மீது விசாரணையின் ஒரு பகுதியாகவும், சந்தேகத்தின் அடிப்படையிலும் கைது நடவடிக்கை இருக்கலாம் என்கிறார் கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா.
தன்மீதான புகாரை திலீப் இதுவரை மறுத்து வருகிறார். பாவனாவுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைதாகி சிறையில் உள்ள முக்கிய குற்றவாளி பல்சர் சுனில், தனது நண்பர் மூலமாக திலீப்பிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அண்மையில் திலிப்பின் நண்பர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இதன் பேரில் திலீப், அவரது நண்பர், மேலாளர் உள்ளிட்டோரிடம் கடந்த வாரத்தில் 12 மணிநேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், பல்சர் சுனில், சிறையில் இருந்தபடி திலீப்பின் மேலாளருக்கு நெருங்கிய நபரிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியல் துன்புறுத்தலின் காட்சிகள், திலீப்பின் மனைவி காவ்யா நடத்திவரும் கடையின் ஊழியரிடம் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தில் அவரது கடையில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திலீப்பும், காவ்யாவும் விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்று கேரள காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இருவரும் தலைமறைவாகி இருக்கிறார்கள்.
திலீப்பின் முதல் மனைவியான மஞ்சுவாரியரின் நெருங்கிய தோழியான பாவனா, காவ்யாவுடனான திலீப்பின் தொடர்பு பற்றி மஞ்சுவாரியாரிடம் அடிக்கடி தகவல் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே மஞ்சுவாரியருடனான திலீப்பின் 13 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தனது பெயருக்கு களங்கம் வந்ததால் அதற்கு பழிவாங்கவே பாவனாவை ஆட்கள் வைத்து கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு திலீப் உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது.
நடிகை பாவனா வழக்கில் இனி நடக்கப்போவது என்ன என்பதை கேரளாவே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
விடையளிக்க மறுப்பது கவலையளிக்கின்றது #UmaOya #Uva
Anonymous Jul 29 2017நோர்வூட் பகுதியில் விபத்து #Norwood #Accident
Anonymous Jul 29 2017ஹாலி-எல ரயில் தண்டவாளத்தில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு #Hali-Ela #Girl #Dead
Anonymous Jul 29 2017சிறையில் இருக்கும் பிரபல நடிகரின் மனைவி கர்ப்பம்?
Anonymous Jul 29 2017'தலைவன் இருக்கின்றான்' அரசியலில் களமிறங்கும் கமல்ஹாசன்
Anonymous Jul 29 2017
Click here to load more...
Post A Comment: