Propellerads
Navigation

விஷாலுடன் இணையும் நடிகை வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடிக்கிறார்.

விஷால், மீரா ஜாஸ்மீன் ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கி வெற்றிப் பெற்ற படம் ‘சண்டக்கோழி’. சினிமா வாழ்க்கையில் நடிகர் விஷாலுக்கு ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் நிறைய கேள்விகள் எழுப்பி வந்தன. இதுகுறித்து லிங்குசாமி தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சில நாட்களுக்கு முன் ‘சண்டக்கோழி2’ தயாராகவுள்ளது என்ற அறிவிப்பை இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டார். இந்த நிலையில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Share
Banner

Post A Comment: