நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் பர்கான் அக்தருடன் திருமணம் செய்யாமலே வாழ்வதாகவும், இது அவரது தந்தை ஷக்தி கபூருக்கு பிடிக்காமல் மகளை, பர்கான் வீட்டிலிருந்து அழைத்து வந்ததாகவும் செய்தி வெளியானது. ஆனால் இதை ஸ்ரத்தா கபூர் மறுத்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகராக திகழ்ந்தவர் ஷக்தி கபூர். இவரது மகள் ஸ்ரத்தா கபூர். தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஸ்ரத்தா, நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதல் வயப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் அதை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பர்கான் அக்தருடன் ஸ்ரத்தா திருமணம் செய்யாமலே வாழ்வதாக செய்தி பரவியுள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தன் மகள் ஸ்ரத்தா, பர்கானுடன் வாழ்வது ஷக்தி பிடிக்கவில்லை என்றும், தன் மகளை பர்கான வீட்டிலிருந்து வலுகட்டாயமாக இழுத்து வந்ததாக செய்தி வெளியானது. ஆனால் இதை ஷக்தி கபூர் மறுத்தார். இப்போது ஸ்ரத்தாவும் இதுப்பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ‛‛பர்கான் வீட்டிலிருந்து என் தந்தை என்னை வலுக்கட்டாயமாக என்னை அழைத்து சென்றதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை நான் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த செய்தி உண்மையில்லை, மேலும் நடிகைகள் பற்றி கிசுகிசு வருவது வாடிக்கையாகிவிட்டது.
ஆனால் இப்போது இந்த விஷயத்தில் என் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரையும் சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள். என்னைப்பற்றிய செய்தியை பொறுத்து கொள்வேன், ஆனால் என் குடும்பத்தாரை பற்றி செய்தி வரும்போது நான் பேசாமல் இருக்க முடியாது. இதுபோன்ற செய்திகள் என் மனதை புண்படுத்துகிறது. எனக்கென்று தனியாக வீடு உள்ளது, இருந்தாலும் நான் என் பெற்றோருடன் தான் வசிக்கிறேன். என் பெற்றோரை விட்டு ஒருபோதும் நான் பிரியமாட்டேன்.

இவ்வாறு ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.
Post A Comment: