ஸ்ருதி ஹாசன் சூர்யாவுடன் சேர்ந்து நடித்துள்ள எஸ் 3 படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது. தெலுங்கில் அவர் பவன் கல்யாணுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதி காதல் பற்றி மனம் திறந்துள்ளார். அதில், நோக்கிய போன், எஸ்.எம்.எஸ். எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது. முன்பு லேண்ட்லைன் போன் இருந்தது. பசங்க போன் செய்தால் அம்மா எடுத்துவிடக் கூடாது என்று பயப்படுவோம். இந்த தலைமுறையினருக்கு அது எல்லாம் தெரியாது.
காதலை பொறுத்தவரை நான் அந்த காலத்து பெண். எனக்கு காதல் கலந்த காமெடி படங்கள் பிடிக்கும். வீட்டில் இருந்தால் அத்தகைய படங்களையே பார்ப்பேன். ஆனால் இதுவரை நான் ஒரு ரொமான்டிக் காமெடி படத்தில் கூட நடிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Post A Comment: