Propellerads

About

Navigation
Recent News

'டார்லிங்' நிக்கிகல்ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் மிகக்குறைந்த காலத்தில் முன்னணி நடிகையான நடிகை நிக்கி கல்ராணி இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராக அறிமுகமான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிக்கி கல்ராணி, அந்த படத்தின் வெற்றியின் காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றார்.

யாகாவராயினும் நாகாக்க', கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'கடவுள் இருக்குறான் குமாரு', போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டின் பிசியான நடிகைகளில்  ஒருவரானார்.

தற்போது அவர் ராகவா லாரன்ஸ் உடன் 'மொட்டசிவா கெட்டசிவா', நெருப்புடா, மரகத நாணயம், கீ, ஹர ஹர மகாதேவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டை போலவே இந்த 2017ஆம் ஆண்டும் நிக்கி கல்ராணிக்கு வெற்றிகரமான ஆண்டாக இருக்க நமது வாழ்த்துக்கள்.
Share
Banner

Post A Comment: