Propellerads
Navigation

'தனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன்': அமலாபால்

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமலாபால் பேசியதாவது:

'விஐபி' முதல் பாகத்தில் என்னை கொலை செய்யாமல் இருந்த தனுஷூக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல் பாகத்தில் காதலர்களாக இருந்த நாங்கள், இந்த படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளோம்' என்று கூறியுள்ளார். 

மேலும் இந்த படத்தின் டிரைலரில் இருந்தே தனுஷை டார்ச்சர் செய்யும் மனைவியாக அமலாபால் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே நேரத்தில் 'விஐபி 3' படம் உருவானால் கண்டிப்பாக நான் தனுஷூக்கு நல்ல மனைவியாக நடிப்பேன்' என்றும் அவர் அமலாபால் கூறினார்.
Share
Banner

Post A Comment: