Propellerads

About

Navigation
Recent News

ஆட்டோ டிரைவரை பாடகராக்கிய டி.இமான்

உதயநிதி நடித்த 'பொதுவாக என்மனசு தங்கம்' படத்தில் இசையமைத்துள்ள டி.இமான், ஒரு பாடலை ஆட்டோ டிரைவரை பாட வைத்து அசத்தியுள்ளார். 
 
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இசை நிகழ்ச்சியில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் பாடியபோது அவருடைய இசைத்திறமையை கண்ட டி.இமான், இந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

கொடுத்த வாய்ப்பை ரமேஷ் நன்கு பயன்படுத்தி அருமையான கிராமிய பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும், நாளை வெளியாகும் இந்த படத்தின் பாடல்களில் அந்த பாடல் இடம்பெற்றுள்ளதாகவும் டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 
 
கடவுள் அருளால் ரமேஷ் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: