Propellerads

About

Navigation
Recent News

அமெரிக்காவில் உடற்பயிற்சிகூட மேலாளர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் ‘மெர்ரிக் பார்க்‘ என்ற வணிக வளாகம் உள்ளது. அதில் ‘ஜிம்‘ (உடற்பயிற்சி கூடம்), ஓட்டல், மற்றும் கடைகள் உள்ளன.

வணிக வளாகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு ஒரு நபர் வந்தார். அவர் அதன் பொது மேலாளர் ஜனின் அகர்மேன் (35), என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

துப்பாக்கி சூட்டில் பொதுமேலாளர் ஜனின் அகர்மேன் பயிற்சியாளர் மரியோ ஹோர்டிஸ் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனின் அகர்மேன் பரிதாபமாக இறந்தார். மரியோ ஹோர் டிசுக்கு தீவிரவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். அதை அறிந்த மர்ம நபர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுதற்கொலை செய்து கொண்டார்.

அவரது பெயர் அபேகு வில்சன் (33). என தெரிய வந்துள்ளது. இவர் அதே உடற்பயிற்சி கூட்டத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஆவார். எதற்காக துப்பாக்கியால் சுட்டார் என தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடக்கிறது.
Share
Banner

Post A Comment: