எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி' திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு, ராஜமாதா சிவகாமியாக நடித்த ரம்யாகிருஷ்ணன், "இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்" என்று பேசிய வசனம் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஞாபகம் இருக்கும்.
இந்த நிலையில், அதர்வா நடித்த 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ரம்யாகிருஷ்ணன், 'இந்தத் திரைப்படம் பெரிய ஹிட்டாக எனது வாழ்த்துக்கள். பாடல்கள் மற்றும் திரைப்படம் சிறப்பாக அமைந்துள்ளது.
"எனவே, இந்தத் திரைப்படம் வெற்றி பெற வேண்டும். இதுவே எனது கட்டளை, என் கட்டளையே சாசனம்" என்று தனது பாணியில் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
Post A Comment: