பொலிவுட்டில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ட்யூப் லைட்' திரைப்படத்தை, திரையரங்கில் ரொக்கெட் விட்டு ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
போர் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள 'டியூப் லைட்' திரைப்படம் இந்தியர் ஒருவர் சீன பெண் மீது காதலில் விழுவது போன்று படமாக்கப்பட்டுள்ளது.
சல்மான் கானுக்கு ஜோடியாக சீன நடிகை ஜூஜூ நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரம்ஜானுக்கு வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் திரையரங்கில் இத்திரைப்படத்தை இன்று பார்வையிட்ட ரசிகர்கள் சிலர், திரைப்படத்தில் சல்மான் கானின் முதல் தோற்றத்தின்போது ரொக்கெட் வெடிகளை வெடித்துள்ளனர்.
திரையரங்கில் பட்டாசு வெடித்ததால் பலரும் அலறிக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர்.
திரையரங்கில் ரொக்கெட் விடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாகப் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
Post A Comment: