லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த படத்தின் கிளைமாக்ஸை ஓடும் மெட்ரோ ரயிலில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.
முதலில் சென்னை மெட்ரோ ரயிலில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டது. ஆனால் நயன்தாரா கிளைமாக்ஸை பெங்களூர் மெட்ரோ ரயிலில் படமாக்கலாமே என்று ஆலோசனை கூற, நயன்தாராவின் யோசனையை ஏற்றுக்கொண்ட இயக்குனர் அஜய்ஞானமுத்து கிளைமாக்ஸை பெங்களூருக்கு மாற்றியுள்ளாராம். இந்த படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை இல்லாத வகையில் விறுவிறுப்பும் த்ரில்லும் கலந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post A Comment: