மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், கஸாய் பிராந்தியத்தில் அரசுப்படையினருக்கும், பழங்குடியின கிளர்ச்சியாளர் படைக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சண்டையில் சிக்கி 3300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள கத்தோலிக்க தேவாலயம் தெரிவித்துள்ளது.
இந்த சண்டையில் கஸாய் பிராந்தியத்தில் உள்ள சுமார் 20 கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு மொத்தமாக ஒரே குழிகளில் புதைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
Post A Comment: