குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம் ஒரே நாளில் மின்னலுக்கு 82 பேர் பலியாகினர். ஆனால் பலி இன்னும் அதிகம், இது குறித்த தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இப்போது பருவ நிலை மாற்றம், இந்த மின்னல் தாக்குதலை மேலும் அதிகரிக்கச்செய்து வருகிறது.
கடந்த 18, 19 ஆகிய இரு தேதிகளில், 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 22 பேர் கருகி உயிரிழந்தனர் என்று வங்காளதேச அரசு நேற்று அறிவித்தது.ஒரு தம்பதியர் தங்களுடைய மகளுடன் வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் வங்காளதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 160-க்கு மேற்பட்டோர் பலியான நிலையில், இப்போது மின்னல் தாக்கி 22 பேர் பலியாகி இருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Post A Comment: