Propellerads
Navigation

'இருமுகன்' ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான 'இருமுகன்' திரைப்படம் இன்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இந்த படத்தின் விமர்சனங்கள் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இந்த படம் நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் மட்டும் வெளியாகவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

காவிரி பிரச்சனை காரணமாக தமிழக-கர்நாடக எல்லையில் கடந்த சில நாட்களாக பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக 'இருமுகன்' திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் இன்று வெளியாகவில்லை. விரைவில் கர்நாடக மாநிலத்தில் ரிலீஸ் செய்யும் தேதியை படக்குழுவினர் அறிவிக்கவுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வெளிநாடுகளில் திரையிடப்பட்ட பிரிமியர் காட்சி பார்த்தவர்கள் இந்த படத்திற்கு சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
   
Share
Banner

Post A Comment: