தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் திரிஷாவும் ஒருவர். லேசா லேசா படத்தில் நாயகியான இவர், அதையடுத்து மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்னர் விஜய், அஜீத், விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த திரிஷா, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கோலேச்சி வருகிறார். மேலும் தற்போது சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். அதனால் திரிஷாவுக்கென்று ஒரு கமர்சியல் வட்டம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் நடித்த திரிஷா அதன்பிறகு தனுசுடன் கொடி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இதுவரை இல்லாத ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார் திரிஷா. அதோடு, அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஒரு பெரிய கனவு அவருக்கு இருந்து கொண்டிருப்பதால், ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார் என்றதும் அந்த படத்தில் தான் நடிப்பதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறாராம் திரிஷா. அதுகுறித்து அப்படத்தை இயக்கயிருக்கும் கபாலி ரஞ்சித்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டாராம் திரிஷா. அதனால் ரஜினியின் புதிய படத்தில் திரிஷா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: