Propellerads
Navigation

இன்று நள்ளிரவு ரெமோ பாடல்கள் வெளியீடு!


சிவகார்த்திகேயன்- அனிருத் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் ரெமோ. அந்த வகையில், எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத், இந்த ரெமோ படத்திலும் அதிரடியான பாடல்களாக கொடுத்துள்ளார். இதனால் முந்தைய படங்களில் பாடல்களை மிஞ்சும் வகையில் ரெமோ பாடல்கள் இருக்கும் என்று கூறி வருகிறார் சிவகார்த்திகேயன்.

மேலும், தற்போது இறுதிகட்ட பணிகளில் இருக்கும் ரெமோ படத்தின் இசை விழா விரைவில் நடப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த முடிவை மாற்றி விட்டனர். மாறாக, இணையதளத்திலேயே ரெமோ படத்தின் பாடல்களை வெளியிடப்போகிறார்கள். அதுவும் இன்று (செப்டம்பர் 5-ந்தேதி) நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Share
Banner

Post A Comment: