இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவு பெறாத நிலையில் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 'தெறி' சூப்பர் ஹிட் ஆகி விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களின் உரிமைகளை பெற விநியோகிஸ்தர்கள் போட்டி போட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
'பைரவா' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்நிறுவனம் ஏரியாவாரியான வியாபாரத்தை தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
முதல்கட்ட தகவலின்படி வட ஆற்காடு, தென்னாற்காடு மற்றும் TK என்று கூறப்படும் திருநெல்வேலி-கன்னியாகுமரி பகுதிகளின் வியாபாரம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை வெளிவந்த தகவலின்படி 'பைரவா' படத்தின் வட ஆற்காடு பகுதியின் ரிலீஸ் உரிமை ரூ.3.7 கோடிக்கும், தென்னாற்காடு மற்றும் TK பகுதிகளின் ரிலீஸ் உரிமை தலா ரூ.3.5 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: