இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது இறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் 'ரெமோ' என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்த நாயகியும், இளையதளபதி விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்து வருபவருமான கீர்த்திசுரேஷ்தான் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகி. இதற்கான முறையான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோக்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: