Propellerads
Navigation

கண்ணதாசனுக்கு நினைவஞ்சலி செலுத்திய இணையதளம் படக்குழு


தமிழ் சினிமாவின் கவியரசர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் கவியரசர் கண்ணதாசன். சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனின் நினைவு நாள் இன்று. இதையொட்டி பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இணையதளம் படக்குழுவும் கண்ணதாசனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

"இணையதளம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. கண்ணணதாசன் நினைவு நாளையொட்டி படப்பிடிப்புத் தளத்தில் கவிஞருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இணையதளம் படத்தின் இயக்குநர்கள் சங்கர், சுரேஷ் பாபு, நடிகைகள் ஸ்வேதா மேனன், சுகன்யா, வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் மரபின்மைமைந்தன் முத்தையா ஒளிப்பதிவாளர் திரு. கார்த்திக் ராஜா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
Share
Banner

Post A Comment: