பத்மாவதி படப்பிடிப்பில் தீபிகா!
பாஜிராவ் மஸ்தானி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு சரித்திர படத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. ‛பத்மாவதி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பன்சாலியின் ஆஸ்தான நடிகர்களாகிவிட்ட ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடிக்கின்றனர், கூடவே ஷாகித் கபூரும் இணைந்துள்ளார். இதில் ராணி பத்மாவதியாக தீபிகா நடிக்கவுள்ளார்.
இதன்படப்பிடிப்பு அடுத்தவாரம் முதல் ஆரம்பிக்க உள்ள நிலையில் முதற்கட்டமாக தீபிகா படப்பிடிப்பில் அடுத்தவாரம் முதல் பங்கேற்கிறார். ஏற்கனவே அவருக்கான போட்டோ ஷூட் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. மேலும் ரன்வீர் சிங், ஷாகித் ஆகியோரும் பத்மாவதி படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்த்து வருகிறார்கள். விரைவில் அவர்களும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்கள்.
பத்மாவதி சுமார் ரூ.170 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாரிக்கப்பட இருக்கிறது. இதை பன்சாலி புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.


Post A Comment: