பாக்., நடிகர்களுக்கு தடையா? பிரியங்கா சோப்ரா கொதிப்பு
கடந்த மாதம், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில், பாக்.,கிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 19 வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, பாக்., நடிகர்கள், இந்திய திரைப்படங்களில் நடித்தால், அந்த படங்களை திரையிட மாட்டோம் என, வட மாநிலங்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாக்., நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை விதிப்பது, நியாயமற்றது; இந்த தடை, வருத்தம் அளிக்கும் செயல். நாட்டில் பெரியளவில் நடக்கும் அரசியல் சம்பவங்களுக்கு, நடிகர்களை பொறுப்பாளி ஆக்குவது தவறு; கலைஞர்களுக்கு, தொழில் மட்டுமே மதம். அதே சமயம், நான் நாட்டுப்பற்று மிக்கவள். நாட்டின் பாதுகாப்பு கருதி, எங்கள் அரசு எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஆதரிக்கிறேன். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.


Post A Comment: