Propellerads
Navigation

காரில் தேசிக்கொடி தலைகீழாக பறந்த விவகாரம்: நாராயணசாமியின் சாரதி பணி இடைநிறுத்தம்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் காரில் தேசியக்கொடி தலைகீழாக பறந்த விவகாரம் தொடர்பாக அவரது கார் டிரைவர் இப்ராகிம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி உள்ளார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு முதல்வர் நாராயணசாமி நேற்று வந்திருந்தார். அவரது காரைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கார்களும் பின் தொடர்ந்து வந்தன.

பின்னர் காரில் இருந்து இறங்கிய நாராயணசாமி அங்கிருந்த சென்றுவிட்டார். அப்போது அவரின் காரின் முன்பக்கத்தில் தேசிய கொடி தலைகீழாக மாற்றப்பட்டிருந்தது. தேசியக் கொடி தலைகீழாக பறப்பதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கார் டிரைவர் இப்ராகீம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முதல்வரின் தனிச்செயலளர் ராஜமாணிக்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: