கிழக்கு ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஹவுரா-கரக்பூர் சரகத்துக்குட்பட்ட மதுப்பூர் - ஜக்பூர் நிலையங்களுக்கு இடையில் இன்று அதிகாலை சரக்கு ரெயிலின் என்ஜின் கவிழ்ந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய பல வெளியூர் ரெயில்கள் வெவ்வேறு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், ஹவுராவில் இருந்து ஒடிசா நோக்கி செல்ல வேண்டிய ரெயில்களும் பத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கவிழ்ந்து கிடக்கும் என்ஜினை அகற்றி அவ்வழியாக போக்குவரத்தை சீர்படுத்தும் பணிகளில் ரெயில்வே பணியாளர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

Post A Comment: