Propellerads

About

Navigation
Recent News

'அட்டி' ரிலீஸ் தள்ளிவைப்பு


மா.பா.கா ஆனந்த், அஷ்மிதா, ராம்கி, நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, நடித்துள்ள படம் 'அட்டி'. விஜயபாஸ்கர் இயக்கி உள்ளார், சுந்தர்.சி பாபு இசை அமைத்துள்ளார், வெங்கடேஷ் அர்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை இ5 எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெயகிருஷ்ணன், கார்த்திகேயன் தயாரித்திருந்தனர். படத்தின் கதையில் ஈர்க்கப்பட்ட இசை அமைப்பாளர் சுந்தர்.சி பாபு இதன் வெளியீட்டு உரிமத்தை பெற்றிருந்தார்.

'அட்டி' நேற்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் நேற்று வெளியாகவில்லை. சரியான தியேட்டர் கிடைக்காததால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் படத்தை தயாரித்தவர்களுக்கும், வாங்கியவருக்கும் இடையிலான பணப்பட்டுவாடாவில் ஏற்பட்ட பிரச்சினைகளே படம் வெளியாகாததற்கு காரணம் என்று கூறுகிறார்கள். அடுத்து படம் வெளியாகும் தேதியையும் அறிவிக்கவில்லை.
Share
Banner

Post A Comment: