ரஜினிகாந்த் நேற்று தனது டுவிட்டரில் கேளிக்கை வரியை குறைத்து லட்சக்கணக்கான சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனது கோரிக்கையாக வைத்தார்.
இந்த நிலையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதில் தானாக நுழைந்து முட்டி மோதிக்கொள்ளும் அஜித், விஜய் ரசிகர்கள் ரஜினியின் இந்த டுவிட்டிலும் கடந்த சில மணி நேரங்களாக மோதி வருகின்றனர்.
இந்த நிலையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதில் தானாக நுழைந்து முட்டி மோதிக்கொள்ளும் அஜித், விஜய் ரசிகர்கள் ரஜினியின் இந்த டுவிட்டிலும் கடந்த சில மணி நேரங்களாக மோதி வருகின்றனர்.
விஜய் இன்னும் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அஜித் ரசிகர்களும், அஜித் இந்த பிரச்சனைக்கு மட்டுமின்றி எந்த பிரச்சனைக்குமே குரல் கொடுக்க மறுப்பது ஏன் என்று விஜய் ரசிகர்களும் காரசாரமாக மோதிக்கொண்டு வருகின்றனர். ஒருசிலர் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளையும் பயன்படுத்தி பதிவு செய்கின்றனர்.
Post A Comment: