Propellerads
Navigation

கவுதமிபுத்ர சாதகர்ணி

பாலகிருஷ்ணாவின் 100 வது படமான இது ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

இதில் நாயகி ஸ்ரேயா, கபீர்பேடி தணிகலபரணி, சுபலே காசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஞானசேகர், இசை - சிரஞ்சன், நடனம் - பிருந்தா, ஸ்வர்ணா, ஸ்டண்ட் - ராம்லஷ்மண், பாடல்கள் - வைரமுத்து, மருத பரணி. வசனம், தமிழாக்கம் - மருதபரணி.

இயக்கம் - கிரிஷ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தியில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.

ஆந்திராவில் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 150 கோடியை வசூலித்த படம் இது.

“இந்த கதை நடந்தது முதலாம் நூற்றாண்டில். இந்த முழு பாரத கண்டத்தின் வடக்கே நஹபாணன் தெற்கே சாதகர்ணி ஆண்டு வந்தனர். கொடுக்கோல் ஆட்சி செய்த நஹ பாணனை வீழ்த்த, சாதகர்ணி அம்மா கவுதமியின் ஆசிர்வாதத்துடன் போருக்கு கிளம்பினான்.
‘பாகுபலி-1’ ‘பாகுபலி-2’ படங்களை போன்ற மற்றொரு சரித்திர படம் ‘கவுதமி புத்ர சாதகர்ணி’.

வெற்றி வீரன் ஆனான் அவனை தாயின் பெயரை சேர்த்து மக்கள் பாராட்டினார்கள் என்பது கதை” என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இதன் படப்பிடிப்பு மொராக்கோ ஜார்ஜியா மற்றும் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. 80 நாட்களில் படப்பிடிப்பை முடித்து இயக்குனர் பாராட்டு பெற்றார்.

ஆந்திராவில் சாதனை படைத்த இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.
Share
Banner

Post A Comment: