சிவாஜி - மோகன்லால் நடிப்பில் கடந்த 1997-ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று, தற்போது தமிழில் வெளியாக உள்ள ‘பயணத்தின் மொழி’ படத்தின் முன்னோட்டம்.
1997-ல் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘ஒரு யாத்ரா மொழி’. இது டிஜிட்டல் மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் ‘ பயணத்தின் மொழி’ என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. ஓம் ஜெயம் தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் இதை மொழி மாற்றம் செய்து டிஜிட்டலில் உருவாக்கி உள்ளனர்.
இதில் சிவாஜி கணேசன், மோகன்லால், பிரகாஷ் ராஜ், ரஞ்சிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - முத்துக்குமார், இசை - இளையராஜா, பாடல்கள் - பெருமாள் முருகன், ‘புதியங்கம்’ முரளி, எடிட்டிங் - பி.லெனின் வி.டி. விஜயன், கதை - பிரியதர்ஷன், வசனம் - ‘புதியங்கம்’ முரளி, தயாரிப்பு - ஆர்.தீபக்குமார், திரைக்கதை, இயக்கம் - பிரதாப் போத்தன்.
கோவிந்தன் தந்தை யார் என்று தெரியாமல் வளர்கிறான். இதனால் சிறுவயதில் அவனை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். அவமானப்படுகிறான். எனவே வெகுண்டெழுந்த கோவிந்தன் என்றைக்காவது ஒரு நாள் தனது தந்தையை கண்டுபிடித்து அவரை கொலை செய்யப்போவதாக தாயிடம் கூறுகிறான்.
இவனுடைய பெரிய தாய்மாமன் மகளான நந்தினி, கோவிந்தனை விரும்புகிறாள். இதற்கு தாய்மாமன் எதிர்ப்பு தெரிவிக்கிறான். இந்த சமயத்தில் கோவிந்தன் தன் தந்தையிடமே வேலை செய்யும் சூழல் ஏற்படுகிறது. இறுதியில் இருவருக்கும் உண்மை தெரிந்ததா? என்ன நேர்கிறது? என்பதே படத்தின் கதை.
Post A Comment: