Propellerads
Navigation

கிரகணம்



இதில் கிருஷ்ணா, சந்திரன், இணைந்து நடிக்கிறார்கள். நந்தினி என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி, சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை - கே.எஸ்.சுந்தர மூர்த்தி, ஒளிப்பதிவு - ஸ்ரீசரவணன், படத்தொகுப்பு - மணிகுமரன் சங்கரா, கலை - விஜய், தயாரிப்பு - சரவணன், கார்த்திக், இணை தயாரிப்பு - சிவக்குமார். இயக்கம் - இளன்.
 
கே.ஆர். பிலிம்ஸ் சார்பில் தயாராகும் படம் ‘கிரகணம்’.
 ‘கிரகணம்’ ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் புதுவிதமான கதை. சந்திர கிரகணம் நிகழும் ஒரு நாள் இரவில் அந்த கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. அந்த இருள் ஒரு மணி நேரம் தான். அதற்குள் அவர்களின் வாழ்வில் என்ன என்ன திருப்பங்கள் வருகிறது என்பதை பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.

“ஒரு நாள், ஓர் இரவு என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை இந்த படத்தில் இயக்குனர் வித்தியாசமாக சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
Share
Banner

Post A Comment: