மார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘குன்றத் திலே குமரனுக்கு கொண்டாட்டம்’.
இதில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரியாமிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, ஜானகி, முக்கிய தோற்றத்தில் ஷகிலா, கே.பாக்யராஜ், கானா பாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-வேல்முருகன், இசை- சங்கர்ராம். இவர் புதிதாக அறிமுகம் ஆகிறார். எடிட்டிங்- தேசிய விருது பெற்ற ராஜா முகமது, கலை-ஸ்டீபன்பாலாஜி, நடனம்-பாபா பாஸ்கர், தயாரிப்பு-மார்வின் புரொடக்ஷன்ஸ். இயக்கம்- பி.எம்.தயா நந்தன். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
ஜாலியான ஒரு இளைஞனுக்கு சமூகத்தில் இருந்து ஒரு பிரச்சினை வருகிறது. அதை தவிர்க்க முயற்சி செய்யும் போது தொடர்ந்து பல சிக்கல்கள் வருகின்றன. அதில் இருந்து அவன் எப்படி மீண்டு காதலியை கைப்பிடித்தான் என்பது கதை.
குன்றத்தூர் பகுதியில் நடைபெறும் கதை... முருகனின் அறுபடை வீடுகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் நாயகன் பிரஜினை இயக்குனர் சீனுராமசாமி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். இமான் அண்ணாச்சியை ஒரு பாடலுக்குத் தான் அழைத்தோம். அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் படம் முழுவதும் கலகலப்பாக வருகிறார். இது அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைக்கு வருகிறது.

Post A Comment: