Propellerads

About

Navigation
Recent News

மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்தது


கொலன்னாவை, மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 100க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த குப்பைமேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் சரிந்து விழுந்த கொலன்னாவை, மீதொட்டுமுல்லை குப்பை மேடு காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

குறித்த இடத்துக்கு முப்படையினர் மற்றும் பொலிஸார், தீயணைப்பு படையினர் வருகைதந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குப்பை மேட்டின் மேல் பகுதியில் தீப்பற்றியுள்ளதுடன், பெக்கோ இயந்திரம் ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விமானப்படையிருக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Share
Banner

Post A Comment: