விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில் விக்ரமும் ஹரியும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
‘சாமி-2’ என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா, இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம்தான் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: