Propellerads

About

Navigation
Recent News

ஆஸ்கார் நாயகனின் புதிய முயற்சி

கேரள மாநிலத்தில் நடைபெறும் 'பூரம்' திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வரிசையாக நிற்கும் யானைகள், விதவிதமக ஒலிக்கப்படும் இசை, பட்டாசுகளின் வாண வேடிக்கை ஆகியவை இந்த திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்

இந்த நிலையில் இந்த விழாவில் ஒலிக்கப்படும் இசையை பதிவு செய்து வருகிறார் ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி. அவருடன் சுமார் 100 உதவியாளர்கள் பல நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட இசைக்கருவிகளின் உதவியால் பதிவு செய்து வருகின்றனர். இசைப்பதிவின்போது தேவையில்லாத சப்தங்களை தவிர்க்க ஐந்து சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுவதாக ரசூல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இசை ஒலிகளை பதிவு செய்ய ஒரு வாரத்திற்கு முன்பே தான் திட்டமிட்டதாகவும், உலகின் மிகப்பெரிய இசை திருவிழாவான இந்த திருவிழாவின் மேஜிக் இசையை நேரடியாக பதிவு செய்வதில் தான் பெருமைப்படுவதாகவும் ரசூல் பூக்குட்டி தெரிவித்தார்.
Share
Banner

Post A Comment: