Propellerads
Navigation

இளம்பெண்ணின் இதயத்தை சாப்பிட கேட்ட மந்திரவாதி!

குஜராத்தில் கடையில் வருமானம் வரவேண்டும் என்பதற்காக இளம்பெண்ணின் இதயத்தை சாப்பிட கேட்ட மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம், பால்கர் மாவட்டம் வான்காவ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (36), இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.

இவர் கடையில் போதுமான வருமானம் இல்லாததால் கடை சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்துள்ளது. 

இதனையடுத்து கடையில் வருமானம் வருவதற்காக தன்னோட நண்பர் ஒருவரை சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது அவர் மந்திரவாதிகளை சந்தித்து அதற்கு தீர்வு காண்போம் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரும் தேவ்நாத் (30), விஜய்நாத் (25), பிரபுநாத் (25), ஆகிய 3 மந்திரவாதிகளை சந்தித்துள்ளார்.

அதற்கு மந்திரவாதிகள் சஞ்சயிடம் சில பரிகாரங்கள் செய்தால் கடையில் நல்ல வருமானம் வரும் என்று கூறியுள்ளனர். 

ரூ.5 இலட்சம் பணம் மற்றும் இளம்பெண் ஒருவரின் இதயம் வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், பூஜை முடித்தவுடன் அந்த பெண்ணின் இதயத்தை எடுத்து உணவாக சாப்பிட வேண்டும்.

அப்படி செய்தால் கடையில் வருமானம் மிக செழிப்பாக இருக்கும். எனவே உடனடியாக ஒரு இளம்பெண்ணின் இதயத்தை கொண்டு வாருங்கள் என்று மந்திரவாதிகள் கட்டளையிட்டுள்ளனர். 

இதனை கேட்டதும் தலை சுற்றிய சஞ்சய் மந்திரவாதிகளிடம் சரி என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த காவல் நிலையத்தில் சென்று நடந்த விவரம் பற்றி தெரிவித்துள்ளார். இதன் பின்னர் 3 மந்திரவாதிகளையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Share
Banner

Post A Comment: