Propellerads
Navigation

ட்ரம்பின் அதிரடி கோலிவூட்டில் எதிரொலி

அமெரிக்க அதிபராக கடந்த 20ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் எப்போது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை ஊகிக்க முடியாத அளவில் அவருடைய அறிவிப்புகள் அதிரடியாக உள்ளது. 7 நாடுகளுக்கு விசா மறுப்பு, H1B விசா சீர்திருத்த மசோதா என அதிரடிகளை தொடங்கியுள்ளதால் அமெரிக்கர்கள் உள்பட உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன. 

இந்நிலையில் டிரம்ப்பின் அறிவிப்புகள் காரணமாக அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டிருந்த கோலிவுட் திரையுலகினர் பலர் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வேறு நாடுகளை பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக முதல்கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்ட கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு', அமெரிக்காவில் பெரும்பான்மையான காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்த இளையதளபதி விஜய்யின் 'விஜய் 61', கவுதம் மேனனின் ஆஸ்தான லொகேஷன் ஆன அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்', தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படம் உள்பட ஒருசில கோலிவுட் படங்களின் படப்பிடிப்பு வேறு நாடுகளில் நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: