இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை சமூக வலைத்தளங்களில் உலக அளவில் டிரெண்ட் ஏற்படுத்த விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று வெளியாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய்யின் முறுக்குமீசை தோற்றத்துடன் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் இந்த படத்தின் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒன்றான பஞ்சாயத்து தலைவர் கேரக்டரில் முறுக்குமீசையுடன் தோற்றமளிக்கின்றார் என்பதும் தெரிந்ததே. முறுக்குமீசையுடன் கம்பீரமான தோற்றத்தில் ஃபர்ஸ்ட்லுக்கில் விஜய் தோன்றுவது உண்மைதானா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும் என்பதால் அதுவரை பொறுமை காப்போம்.
பஞ்சாயத்து தலைவர் மட்டுமின்றி டாக்டர் மற்றும் மேஜிக்மேன் ஆகிய தோற்றங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யாமேனன் காஜல் அகர்வால், சமந்தா, என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கின்றது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: