விஜய்-அட்லி இணைந்த படத்திற்கு 'தெறி' என்ற வித்தியாசமான மாஸ் டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதே பாணியில் 'தளபதி 61' படத்திற்கு 'மெர்சல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த டைட்டிலால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிகே சென்றுள்ளனர். மேலும் டைட்டிலுடன் வெளியாகியுள்ள முதல்பார்வை போஸ்டரில் விஜய் அட்டகாசமான ஸ்டைல் போஸ் உடன், ஜல்லிக்கட்டு பின்னணியில் உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஏற்கனவே விஜய் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' டைட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: