ஜெயிக்கிறார்கள், ஒரு சிலர் வந்த வேகத்தில் திரும்பி விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்த போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுவாசிகா.
வைகை படத்தில் அறிமுமான சுவாசிகா அதன் பிறகு கோரிப்பாளையம், மைதானம் படங்களில் நடித்தார். சாட்டை படத்தில் சமுத்திரகனியின் மனைவியாக நடித்தார். சாட்டை சுவாசிகாவுக்கு ஒரு அடையாளம் கொடுத்தாலும் சீனியர் நடிகருடன் நடித்ததால் அடுத்து ஜூனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தது. அடுத்து அவர் நடித்த பல படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனது.
தற்போது அவர் நடித்து வரும் பிரபா என்கிற படம்தான் அவரது பெரிய நம்பிக்கை. இது பக்கா ஹீரோயின் சப்ஜெக்ட். மூன்று வயது குழந்தைக்கு அம்மாவாக டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். தன் குழந்தைக்கு வரும் ஒரு பிரச்னையை ஒரு அம்மாவாக எதிர்த்து நின்று எப்படி ஜெயிக்கிறார் என்கிற கதை.
விஜயசாந்தி ஸ்டைலில் ஆக்ஷனிலும் இறங்கி அடிக்கிறார். கொஞ்சம் கிளாமர் கலந்தும் நடிக்கிறார். பல ஹீரோயின்கள் நடிக்கத் தயங்கிய கேரக்டரில் துணிச்சலுடன் நடித்து வருகிறார். நந்தன் என்ற புதுமுகம் தயாரித்து, இயக்குகிறார். ஜனனி இசை அமைக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய மற்ற பணிகள் நடந்து வருகிறது.
Post A Comment: