Propellerads
Navigation

குஷ்பு வெளியிட்ட'கட்டப்பா'வின் இன்னொரு ரகசியம்

குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில், 'சத்யராஜ் அவர்களை தவிர வேறு யாராவது கட்டப்பா கேரக்டரில் நடித்திருந்தால் பாகுபலிக்கு இவ்வளவு பெரிய ஹிட் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நான் ஒரு ரகசியத்தை சொல்லப்போறேன். சத்யராஜூக்கு ஜோடியாக அதிக படங்களில் நான் தான் நடித்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். கொடுக்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி கொண்டு அந்த கேரக்டராகவே மாறிவிடுவதில் அவர் வல்லவர். 'பெரியார்' படத்தில் மிக அற்புதமாக நடித்திருந்தும் அவருக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றமே. ஆனாலும் இந்த முறை அவருக்கு கட்டப்பா கேரக்டர் விருதை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்' என்று மேலும் குஷ்பு கூறியுள்ளார்.
சத்யராஜூடன் இணைந்து குஷ்பு 'புரட்சிக்காரன்', வீரநடை', 'உன்னை கண் தேடுதே', 'பிரம்மா', 'கல்யாண கலாட்டா', ரிக்சா மாமா', 'பெரியார்', 'மலபார் போலீஸ்', 'நடிகன், 'வெற்றிவேல் சக்திவேல்', 'சுயம்வரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: