தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தை தெலுங்கில் கைதி நம்பர்-150 என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்தார் சிரஞ்சீவி.
வி.வி.விநாயக் இயக்கிய அப்படத்தில் காஜல்அகர்வால் நாயகியாக நடித்தார். அப்படம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படத்திற்காக கதை கேட்டு வந்த சிரஞ்சீவி, தற்போது ஒரு சரித்திர கதையை ஓகே செய்துள்ளாராம்.
ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையில் அப்படம் தயாராகிறதாம்.
சரித்திர கதை என்பதால் முந்தைய படத்தைவிட பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படத்தில் நடிக்கிறாராம் சிரஞ்சீவி. மேலும், இந்த படத்தில் இந்தியாவிலுள்ள பல பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்களாம்.
அதன் முதல்கட்டமாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ஐஸ்வர்யா ராயை புக் பண்ணியிருக்கிறார்கள்.
Post A Comment: