உலகில் உள்ள அனைத்து சினிமா நட்சத்திரங்களின் இரசிகர்களை விட தமிழக சினிமா இரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.
தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, பதாதைகள் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது உள்பட பலவிதங்களில் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
மேலும் ஒருசிலர் அன்பு மிகுதியால் கோவில் கட்டி வழிபடுவதும் உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை குஷ்புவுக்கு மதுரையில் இரசிகர்கள் கோவில் கட்டினர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நடிகர் விஜய்க்கு சிலை வைத்து அதற்கு தீபாராதனை, பிரார்த்தனை ஆகியவைகளை செய்து வருகின்றனர்.
மேலும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுபவர்கள் மாலைகளை ஐயப்பன் சிலையில் வைத்து வணங்கி பின்னர் போடுவதை போலவே விஜய்யின் சிலைக்கு மாலை வைத்து வணங்கி பின்னர் தாங்கள் அணிந்து கொண்டு வருகின்றார்களாம்.
அதுமட்டுமின்றி கடவுளே விஜய், பைரவா விஜய், என்பதை மந்திரம் போல் சிலைமுன்பு நின்று கூறியவாறு பிரார்த்தனை செய்தும் வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Post A Comment: